மோடிக்கு நிகரான தலைவர் ராகுல் இல்லை !! கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் நோட்டீஸ்
பிரதமர் மோடியுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை ஒப்பிட்டு பேசியதன் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது காங்கிரஸ் தலைமை.
கார்த்தி சிதம்பரம் கருத்து
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற தீவிர முனைப்பை காட்டி வரும் சூழலில், பாஜகவும் ஆட்சியை தக்க வைத்துகொள்ள பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி இந்திய கூட்டணியில் நீடித்து வருகின்றது. அது பற்றி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்த்துக்கள் தற்போது அவருக்கே பிரச்னையாகியுள்ளது.
நோட்டீஸ்
தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், மோடியுடன் ஒப்பிடும்போது ராகுல்காந்தி நிகரான தலைவர் இல்லை என கூறியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கள் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதுகுறித்து விளக்கம் கேட்டு கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.