அந்த நடிகை அப்படி இல்லையா..? - நிருபரின் கொச்சையான கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலடி!
நடிகை நிமிஷா சஜயன் குறித்த நிருபரின் கொச்சையான கேள்விக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
நிருபரின் கேள்வி
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படக்குழு செய்தியாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது நிருபர் ஒருவர் 'சித்தா படத்தில் நடிகை நிமிஷா சஜயன் சிறப்பாக நடித்திருப்பார்.
இயக்குநர் பதிலடி
அவர் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும் அவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் அவரை தேர்வு செய்ததற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் "அவங்க அழகாக இல்லை என்று நீங்க எப்படி முடிவு பண்ணீங்க..? அது உங்கள் மனநிலை, நீங்கள் அழகு என்றால் சில வரையறை வைத்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது' என்று நிறம் குறித்து கேள்வி எழுப்பிய நிருபருக்கு தக்க பதிலடி கொடுத்தார்.
மஹர சிறையில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : கைதிகளை பார்வையிடவும் அனுமதி இல்லை IBC Tamil