அய்யயோ நா அப்படி பேசவே இல்லை...மாட்டிவிட்ட பயில்வான் - விளக்கம் கொடுத்த கார்த்திக் குமார்
கார்த்திக் குமார் அண்மையில் பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக் குமார் சுசித்ரா
பின்னணி பாடகி சுசித்ரா - நடிகர் கார்த்திக் குமார் இருவரும் கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2017-இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சுசித்ராவின் அக்கவுண்டில் வெளியான "suchi leaks" பெரும் பூகம்பத்தை கிளப்பியது. இன்றளவும் இது சினிமா வட்டாரங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இந்த சூழலில் தான், அண்மையில் அளித்த பேட்டியில் சுசித்ரா நடிகர் கார்த்திக் குமாரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மிகவும் சரமாரி விமர்சனங்களை வைத்துள்ள அவரின் குற்றச்சாட்டு வீடியோ சமூகவலைத்தளத்தில் பெரும் வைரலாகியது. கார்த்திக் குமாரை தன்பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக பேசி சர்ச்சையை கிளப்பினார் சுசித்ரா.
அவ்வீடியோவில், பயில்வான் ரங்கநாதனை விமர்சித்தும் கடுமையாக சாடியுள்ளார் சுசித்ரா. இந்நிலையில், பயில்வான் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பெரும் கவனம் பெற்றுள்ளது கார்த்திக் குமார் பேசிய கருத்துக்கள் தான். அவர் பேசியது வருமாறு, தப்பு பண்றவங்களுக்கு அடுத்தவர்கள் மீது தான் பழி சொல்ல தோனும். நீ வந்து தப்பு பண்ற category. அந்த தப்பை யாரும் கேட்டு expose ஆகிட கூடாது'னு மித்தவாங்க மேல பழி போடுற category'னு எல்லாருக்கும் தெரியும்.
நீ புதுசா இங்க பூசி மொழுகாத. Issue here is why are you abusing my mother, my children and me, why are you tormenting me. ஒரு சாப்பாட போட்டு, ஒரு தூங்க வைக்குறது கூட உனக்கு தெரியல'னா , அப்புறம் நீ மனுஷி'னு தான் நா கேட்டேன். அது எதோ புதுசா ஆரம்பிச்ச..
அசிங்க அசிங்க பேசற நீ வாய்க்கு வந்தபடி, அவ வாயில வை, இவ வாயில வை, அவ கூட படுத்தியா? இவ கூட படுத்தியா? இதெல்லாம் யாரும் படிச்சவங்க பேசுறது கிடையாது இதெல்லாம். படிக்காத (என சில சமூகத்தை குறிப்பிட்டு) அவுங்க தான் இதனை பேசுவாங்க. இந்த language உனக்கு எங்க இருந்து வந்துச்சு'னு தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லையே.
நல்ல ஒரு ஆச்சாரமான brahmin family'ல இருந்து தான் வந்த. அப்புறம் என் இப்படி சாக்கடை நாராசமான பேச்சு'னு தான் கேட்டேன். மற்ற பிற சமூகங்களை தாழ்த்தியும், பிராமண சமூகத்தை குறித்து உயர்வாகவும் அவர் பேசியுள்ள கருத்துக்களுக்கு பெறும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
எனது குரல்
இல்லை ஆடியோ வைரலான நிலையில் பலரும் கார்த்திக் குமாருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து அவர் மீது சட்ட நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
பிரச்சனையை அறிந்த கார்த்திக் குமார் உடனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "அது எனது குரல் இல்லை. அவை எனது வார்த்தைகள் இல்லை. நான் அப்படி பேசவே இல்லை" என்று குறிப்பிட்டுருக்கிறார்.