மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் வீடு திரும்பினார்! நாளை முதல் தீவிர பிரசாரம்

hospital cinema actor karthik
By Jon Mar 25, 2021 02:30 PM GMT
Report

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் பூரண நலம் பெற்றுள்ளார். பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சி வருகிற சட்டசபை தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து அந்த கட்சியை ஆதரித்து கார்த்திக் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலையில் ஈடுபட்டார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகுக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது கார்த்திக் பூரண நலம் பெற்று வீட்டுக்கு திரும்பி உள்ளார். இதையடுத்து நாளை முதல் சங்கரன்கோவில், ராஜபாளையம், போடிநாயக்கனூர், மதுரை, திருப்பரங்குன்றம், ராயபுரம் தொகுதிகளில் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.