திட்டமிட்டு கார்த்திக் கோபிநாத்தை சிக்கவைத்துள்ளார்கள் - சூர்யா சிவா..!
அண்மையில் பாஜகவில் இணைந்த திருச்சி சிவா எம்பி மகன் சூர்யா ஐபிசி தமிழ் மெய் பொருள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர் பாஜகவில் பயணம் தீவிரமாக போவதாகவும்,சுவாரஸ்யமாக இருப்பதாகவும் கூறினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கார்த்திக் கோபிநாத் யார் என்றே தெரியாது என்று சொல்கிறார் என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த சூர்யா விகடன் சாதாரண குடும்பம் கிடையாது நீங்க விகடனை பகைத்து கொண்டால் உங்களுடைய எல்லா அந்தரங்கங்களும் வெளியே வந்துவிடும் என்றார்.
விகடன் ஜீ ஸ்கெயர் நிறுவனம் பற்றி எல்லாம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். வாரம் ஒரு கம்பெனி பற்றி போட்டார்கள் என்றால் நீங்க ஆட்சி நடத்த முடியாது என்றார்.
மேலும் முழு பேட்டியை காண கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்