ரூ.50 லட்சம் மோசடி புகார் - கார்த்திக் கோபிநாத் அதிரடி கைது

By Nandhini May 30, 2022 05:07 AM GMT
Report

கோயில்களை சீரமைத்துத் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்தை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் பிரசித்தி வாய்ந்த பெரம்பலூரில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில். இக்கோவிலில் கடந்த ஆண்டு சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து எடுத்து விட்டு சென்றனர். இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், பா.ஜ.க ஆதரவாளரும், யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கோயில்களை சீரமைத்துத் தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

அறநிலையத் துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலை புரனமைப்பதாக கூறி மக்களிடம் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்ததாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ரூ.50 லட்சம் மோசடி புகார் - கார்த்திக் கோபிநாத் அதிரடி கைது | Karthik Gopinath