ஒரே ஸ்டியோவில் பீஸ்ட் ..சர்தார் .. விஜய்யை சந்திப்பாரா கார்த்தி?
நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார் ஜார்ஜியாவில் படபிடிப்பு முடிந்த நிலையில்
சென்னையில் மீதம் உள்ள காட்சியினை படமாக்க திட்டமிட்டது படக்குழு ஆனால் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.
இந்த நிலையில் தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
இதற்காக சென்னை பூந்தமல்லி அருகே படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட்டு வரும் நிலையில்.
அதே ஸ்டூடியோவில் கார்த்தி நடிக்கும் சர்தார்'படத்தின் ஷூட்டிங்கும் நடக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் 2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியுள்ளது.
இன்னும் நான்கு நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய், கார்த்தி நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஒரே ஸ்டூடியோவில் நடைபெறுவதால், இருவரும் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.