சோழ இளவரசே நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது : அருண்மொழிவர்மருக்கு உத்தரவிட்ட வந்தியத்தேவன்

Karthi Ponniyin Selvan Vandhiyathevan tweet to Jayam Ravi
By Irumporai Aug 26, 2021 06:32 AM GMT
Report

வாசகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற கல்கியின் 'பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலை சினிமாவாக்கி வருகிறார் மணிரத்னம். இதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது குவாலியரில் நடந்து வருகிறது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்து நேற்று சென்னைத் திரும்பினார் ஜெயம் ரவி படப்பிடிப்பு குறித்து தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார் .

அதில் பொன்னியின் செல்வன் படத்தில், இரண்டு பாகத்திற்கான எனது படப்பிடிப்பை முடித்துவிட்டேன். மணி சார் என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு கவனித்துக் கொண்டதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வரை உங்களை மிஸ் பண்ணுகிறேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத் தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, இந்த ட்வீட்டைக் கண்ட நடிகர் கார்த்தி, இளவரசே (ஜெயம் ரவி) நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது.

இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம். - வந்தியத்தேவன் " என்று ஜாலியாக டிவிட் செய்துள்ளார். இதன் மூலம் பொன்னியின் செல்வன் படத்தில் தனது காதாபாத்திரம் வந்தியதேவன் என்பதை கார்த்திஉறுதி செய்துள்ளார். இதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.