தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு முழு காரணம் பிரதமர் மோடி தான்... கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு...
கொரானா தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு முழு காரணம் பிரதமர் மோடி தான் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் பொது மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்களிடையே ஆர்வம் இருந்தாலும் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.இதனிடையே
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி., இவ்வாறு கூறினார். ஆறு கோடி கொரோனா தடுப்பூசியை வெளிநாட்டிற்கு அனுப்ப பிரதமர் மோடி எடுத்த தன்னிச்சையான முடிவு தான் தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து எச்.ராஜாவின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எச்.ராஜா போன்றவர்களின் தேவையில்லாத பேச்சுக்களை தற்போது கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், தற்போது நாட்டின் மிக முக்கிய பிரச்சினை தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் என்றும் தெரிவித்தார்.