ஆடிட்டர் கைது - முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு

Karti Chidambaram
1 மாதம் முன்

விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிஐ சோதனை நடத்தியது.அதோடு சிதம்பரத்தின் மகன் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சீன நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா பெற ரூபாய் 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும் , ப. சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடாக விசா பெறப்பட்டதாகும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று முன்தினம் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்தது. கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ போலீசார் 4 நாள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.     

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.