விசா முறைகேடு வழக்கு : சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்
சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த 18-ம் தேதி கைது சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார்.
தனியார் மின் நிலையத்தில் பணியாற்ற 250க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக பாஸ்கர ராமன் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்யபட்டது.
சீனாவை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் கூறப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இவர்கள் தொடர்பான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. இதன்பின், சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளிநாடு சென்ற கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பிய 16 மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் சிபிஐ விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராவார் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகியுள்ளார்.
https://ww