பெண் கண்டெக்டரை அறைந்த ஆண் பயணி - என்ன நடந்தது?

Karnataka
By Sumathi Jan 08, 2026 09:37 AM GMT
Report

பெண் நடத்துநரை பயணி தாக்கிய வீடியோ வைரலாகி சர்ச்சை எழுந்தது.

பெண் நடந்துனர்

கர்நாடகா, கதக்கில் உள்ள சுங்கச் சாவடி அருகே அப்பகுதியை சேர்ந்த சிலர் பேருந்துக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாக காத்திருந்தும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்து ஏதும் வரவில்லை.

ஆண் குழந்தை வேணும்; 10 மகள்கள் - 11வது பிரசவத்தில் ஆபத்து

ஆண் குழந்தை வேணும்; 10 மகள்கள் - 11வது பிரசவத்தில் ஆபத்து

பின் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை இடைமறித்து நிறுத்தியுள்ளனர். பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் பயணிகளை ஏன் வண்டியை தடுத்தீர்கள் என்று திட்டியுள்ளார்.

அதற்கு, பேருந்தில் இடம் இருக்கும்போது தங்களை ஏற்றிச் சென்றால் என்ன என்று எதிர் கேள்வி கேட்டு ஒருவர் உள்ளே ஏறியுள்ளார். உடனே பெண் நடந்துனர், கண்ட இடத்தில் எல்லாம் பேருந்தை நிறுத்த முடியாது என்று பேசியுள்ளார்.

தாக்கிய பயணி 

ஆனால் பயணிகள் எதனையும் கண்டுகொள்ளாமல், பேருந்துக்குள் ஏற முற்பட்டுள்ளனர். நடத்துநர், அவர்களை தடுத்து நிறுத்தியதால் பயணி ஒருவர் நடத்துநனரின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். தன்னை தாக்கிய நபரை பதிலுக்கு நடத்துநர் பளார் விட்டுள்ளார்.

ஆண் குழந்தை வேணும்; 10 மகள்கள் - 11வது பிரசவத்தில் ஆபத்து

ஆண் குழந்தை வேணும்; 10 மகள்கள் - 11வது பிரசவத்தில் ஆபத்து

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பணியில் இருந்த பெண் நடத்துநரை தாக்கியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில், பெண் நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.