கர்நாடகாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி 2 போலீசார் பலி - ஒருவர் உடல் கண்டெடுப்பு

Viral Video Karnataka Death
By Nandhini Sep 07, 2022 08:27 AM GMT
Report

கர்நாடகாவில் ஆற்று வெள்ளத்தில் 2 போலீசார் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஒருவரின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கனமழை

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பாலங்கள் நிரம்பி வழிகிறது.

தேடும் பணி தீவிரம்

இந்நிலையில், நேற்றிரவு 2 போலீஸ் கான்ஸ்டபிள்கள் பாலத்தை பாலத்தை கடக்க முயற்சி செய்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் மேற்கொண்டனர். இந்நிலையில், நிஞ்சப்பாவில் உயிரிழந்த ஒரு கான்ஸ்டபிளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு கான்ஸ்டபிளின் உடலை தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். 

karnataka-viral-video-2-police-dead