அனாவசியமாக ஹாரன் அடித்த டிரைவர்கள் - போலீசார் கொடுத்த நூதன தண்டனை

Viral Video Karnataka
By Karthikraja Jan 22, 2025 03:30 PM GMT
Report

அனாவசியமாக ஹாரன் அடித்த டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் நூதன தண்டனை அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஹார்ன் சத்தம்

வாகனம் ஓட்டும் போது வளைவுகளில் எதிர் திசையில் வருபவர்களை எச்சரிக்கை ஹார்ன் அடிப்பது அவசியம். அதே போல் முன்னே செல்பவர்களை எச்சரிக்கவும் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் ஹார்ன் அடிப்பது உண்டு.

karnataka police horn punishment

ஆனால் ஒரு சில வாகன ஓட்டிகள், அனுமதிக்கப்பட்டதை விட அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்களை பயன்படுத்துவதோடு, அவசியமற்ற நேரத்திலும் ஹார்ன் அடித்து சாலையில் பயணிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவார்கள்.

நூதன தண்டனை

இதே போல், கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் தேவையில்லாமல் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்களை பயன்படுத்திய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் விநோத தண்டனை ஒன்றை அளித்துள்ளனர்.

இதில் வாகன ஓட்டிகளை வாகனத்தில் இருந்து கீழே இறக்கிய அவர், ஹார்னுக்கு அருகே காதை வைக்க வைத்து, அவர்களின் வாகனத்தில் உள்ள ஹார்னை அடித்துள்ளார். இதன் ,மூலம் அவர்கள் அடிக்கும் ஹார்னால் சாலையில் பயணிக்கும் மக்களுக்கு எவ்வளவு இடையூறு ஏற்படுகிறது என்று புரியும் என கூறியுள்ளார். 

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதே போல் தாங்க முடியாத LED உயர் பீம் ஹெட்லைட்கள் பயன்படுத்துபவர்களுக்கும் இதே போன்ற சிகிச்சையை வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.