சந்தோஷத்தில் ஆரம்பித்த திருவிழா.. 120 அடி தேர் சாய்ந்து விபத்து -2 பேர் உயிரிழப்பு!
120 அடி தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி, நேற்று 120 அடி உயர தேரோட்ட நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
உயிரிழப்பு
தேரோட்ட நிகழ்ச்சியின் போது திடீரென காற்றுடன் மழை பெய்ததால் 120 அடி உயர தேர் சாய்ந்தது.இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.மேலும் தேரின் அடியில் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் சாலையோரம் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. மேலும் இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த லோகித் (வயது 24) என்ற ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.