மன்னிப்பாயா ஒரே முறை : பள்ளியின் சுவர்களில் 'Sorry Sorry' என எழுதி வைத்த மர்ம நபர் , போலீஸ் விசாரணை

Karnataka
By Irumporai May 25, 2022 11:16 AM GMT
Report

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியின் நுழைவுவாயில் மற்றும் சுவர்களில் சாரி என்ற வாசகம் எழுதப்படுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் காமக்ஷிபல்யா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்திதாமா தனியார் பள்ளியின் நுழைவாயில், சுவர்கள் மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் சாரி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இதனை காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

மன்னிப்பாயா ஒரே முறை : பள்ளியின் சுவர்களில்

இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், டெலிவரி பாய்ஸ் வேடத்தில் வந்த மர்மநபர்கள் நள்ளிரவில் இதை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கும், மாணவருக்கும் காதல் இருந்து இருக்கலாம் என்றும், மாணவியுடன் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அவரை சமாதானப்படுத்தும் வகையில் மாணவர், சுவர்களில் 'சாரி' என்று எழுதி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது