குண்டும், குழியுமான சாலை... சமூக ஆர்வலர் நடத்திய நூதன போராட்டம்

Viral Video Karnataka
By Irumporai Sep 15, 2022 05:15 AM GMT
Report

கர்நாடகாவில் வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

கர்நாடகாவில் சூழ்ந்த வெள்ள நீர்

கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததையடுத்து சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளம் படிப்படியாக வடிந்தது. மழை வெள்ளத்தில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன.

குண்டும், குழியுமான சாலை...  சமூக ஆர்வலர் நடத்திய  நூதன போராட்டம் | Karnataka Social Activist Protest To Repair Roads

சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், உடுப்பியில் சாலையை சீரமைக்க கோரி நித்தியானந்தா என்ற சமூக ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளார்.

சாலையில் உருண்டு போராட்டம்

காவி உடையணிந்து கொண்டு, சாலையில் தேங்காய் உடைத்து பூஜை செய்த அவர் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து நித்தியானந்தா கூறும்போது, மழை வெள்ளத்திற்கு பிறகு சாலைகள் படுமோசமாக மாறிவிட்டது.

அரசு அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்பதற்காக இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்தார்.

மக்கள் பிரச்சனைகளுக்கு இவர் விநோதமான முறைகளில் போராட்டம் நடத்தி பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.