மாணவியிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தலைமை ஆசிரியரை வெளுத்து வாங்கிய சக மாணவிகள்...!

Sexual harassment Karnataka
By Nandhini Dec 16, 2022 01:10 PM GMT
Report

 கர்நாடக மாநிலத்தில் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தலைமையை ஆசிரியரை சக மாணவிகள் வெளுத்து வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைமை ஆசிரியரை வெளுத்து வாங்கிய மாணவிகள்

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவியிடம் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி பள்ளியின் தலைமை ஆசிரியரை மாணவிகள் ஒன்று சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த ஆசிரியரை கைது செய்த போலீசார் கற்பழிப்பு மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்குகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சபாஷ்.. சரியான நீதி... என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

karnataka-sexual-abuse-student-head-teacher-video