கர்நாடகாவில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

today open karnataka school colleges
By Anupriyamkumaresan Aug 23, 2021 03:23 AM GMT
Report

கர்நாடகாவில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த அமைச்சர்கள் நேரில் சென்று பள்ளிகளை பார்வையிட வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு | Karnataka School Colleges Open Today

மேலும், வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கவும், கொரோனா விதிகளை பின்பற்றவும் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.