கர்நாடக அரசியல் : ஆன்மிக அரசியலா , காங்கிரஸ் ஆட்சியா ? வெல்லப்போவது யார்

BJP Karnataka
By Irumporai Feb 16, 2023 12:33 PM GMT
Report

கர்நாடகாவில் தற்போது தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது, குறிப்பாக மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா ? பாஜக தனது ஆட்சியை தக்க வைக்குமா என போட்டி நிலவுகின்றது.

கர்நாடக பாஜக 

2023ஆம் ஆண்டு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனெனில் 9 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதில் தென்னிந்தியாவில் தேர்தல் நடக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தெற்கில் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மாநிலம். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் சூழலில் கர்நாடக மாநில வெற்றியை பாஜக மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது

கர்நாடக அரசியல் : ஆன்மிக அரசியலா , காங்கிரஸ் ஆட்சியா ? வெல்லப்போவது யார் | Karnataka Politics In Tamil

மீண்டும் ஆட்சிக்கு வருமா  

தற்போது முதலமைச்சரக உள்ள பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளது, குறிப்பாக அரசு டெண்டர்களை முடிக்க கமிஷன் கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அமைச்சர்களுக்குள் மோதல், ஹிஜாப் விவகாரம், லவ் ஜிகாத் சர்ச்சை, பெங்களூருவின் மோசமான கட்டமைப்பு வசதிகள் என குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

இந்நிலையில் கர்நாடகா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் இணைந்து சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், காங்கிரஸ் 108 முதல் 114 இடங்களில் வெல்லும் என்று தெரியவந்துள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். அப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கர்நாடக அரசியல் : ஆன்மிக அரசியலா , காங்கிரஸ் ஆட்சியா ? வெல்லப்போவது யார் | Karnataka Politics In Tamil

அதே சமயம் கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் உள்ள பாஜக அரசியல் தலைவர்கள் பேசும் கருத்துக்கள் கடும் சர்ச்சையினை கிளப்பியுள்ளது வரும் மே 24 ம் தேதியோடு முடிவைடைய உள்ளது . இந்த நிலையில் பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் கர்நாடக மாநில எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகளை வைத்து தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்தி தாமரைக்கே வாக்களிக்குமாறு மக்களிடம் பரப்புரை செய்து வருகிறார்கள்.

குறிப்பாக கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை இந்த பிரச்சார கூட்டங்களில் பேசி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது இது அனுமனின் பூமி. திப்புவின் ஆதரவாளர்கள் இங்கு இருக்கக்கூடாது. ராமர் மற்றும் அனுமனை கொண்டாடுபவர்கள் மட்டுமே இங்கு இருக்க வேண்டும் என்றார். நளின் குமாரின் இந்த கருத்து மத வெறுப்பை தூண்டும் வகையில் அமைந்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்கள்.

மீண்டும் ஆட்சிக்கு வருமா

அதே போல் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் காங்கிரஸ் கட்சியினர் திப்பு சுல்தானுக்கு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி தருகிறார்கள். இது நமது மாநிலத்திற்கு தேவையில்லாதது. விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் VS பாரதிய ஜனதா கட்சிகள் மத்தியில் போட்டி கிடையாது இந்த தேர்தல் திப்பு சுல்தான் சித்தாந்தம் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தங்களுக்கு இடையில்தான் நடைபெறுகிறது. நம் நாட்டிற்கு தேச பக்தர் சாவர்க்கரா தேவையா அல்லது திப்பு சுல்தான தேவையா? என்பது பற்றி விவாதிக்கலாம் வருமாறு சித்தராமையாவுக்கு நான் சவால் விடுக்கிறேன் என்று தெரிவித்தார்

கர்நாடக அரசியல் : ஆன்மிக அரசியலா , காங்கிரஸ் ஆட்சியா ? வெல்லப்போவது யார் | Karnataka Politics In Tamil

இந்த நிலையில் இந்நிலையில், ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும், இணைப் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் நியமித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டார்.

அதே போல் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தான் எனது கடைசி தேர்தல் போராக இருக்கும், ஆனால் கர்நாடக அரசியலில் நான் தொடர்ந்து செயல்படுவேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த தேர்தலுக்காக ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

ஹிஜாப் விவகாரம்

காங்கிரஸ் தனது தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று ஒரு மாத காலம் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா கையெழுத்திட்ட வாக்குறுதி அட்டைகளை அக்கட்சி மக்களிடம் வழங்கவுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் பெண் குடும்பத் தலைவிகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமும், மாதம் ரூ.2,000ம் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது.

கர்நாடக அரசியல் : ஆன்மிக அரசியலா , காங்கிரஸ் ஆட்சியா ? வெல்லப்போவது யார் | Karnataka Politics In Tamil

மேலும், பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு மீதான குற்றப்பத்திரிகையையும் காங்கிரஸ் கட்சியினர் விநியோகிக்க உள்ளனர். முன்னதாக, கர்நாடக காங்கிரஸ் கடலோரப் பகுதிக்கான 10 அம்ச தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஈர்ப்பது, சுற்றுலா வளர்ச்சி மற்றும் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவை உள்ளன. ஏற்கனவே ஹிஜாப் விவகாரம் கர்நாடகாவில் புயலை கிளப்பிய நிலையில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைக்குமா எனபதை தேர்தல் முடிவுகள்தான் கூற வேண்டும்