கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்? : இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

ADMK Karnataka
By Irumporai May 16, 2023 04:42 AM GMT
Report

கர்நாடக முதலமைச்சருக்கான போட்டியில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், இன்று முதலமைச்சர் யார் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

கர்நாடக தேர்தல்

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன.

கடும் போட்டி

பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அத்துடன் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் அடுத்த முதல்வர் யார் என்பதில் சித்தராமையாவுக்கும், மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி இருந்து வருகிறது.    

கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்? : இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு | Karnataka New Cm Anouncement To Be Reveal Today

இந்த நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரையும் டெல்லி வருமாரு கட்சி தலைமை அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில், சித்தராமையா மட்டுமே டெல்லி சென்றிருந்த நிலையில், டி.கே.சிவகுமார் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்தார்.

யார் முதலமைச்சர்

இதனால் முதல்வர் பதவிக்கான மோதல் முற்றியதாக பார்க்கப்பட்டது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என 2 பேரும் பிடிவாதமாக இருப்பதால் யாரை ஆட்சியில் அமர வைப்பது என்று முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. இதனால் முதலமைச்சர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது.

இருப்பினும் காங்கிரஸ் மேலிடம் இன்று புதிய முதலமைச்சரை அறிவித்து, பதவி ஏற்பு விழாவை வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது