மனைவியின் வாயைப் பெவி குவிக் போட்டு ஒட்டிய கொடூரம்..கணவர் வெறிச்செயல் - பகீர் புகார்!
மனைவியின் வாயைப் பெவி குவிக் போட்டு ஒட்டி கொலை செய்யக் கணவர் முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெவி குவிக்
கர்நாடக மாநிலத்தில் உள்ள கியாதஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர்கள் லிங்கேஸ்வரா -மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளை கடந்த நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர்.
மஞ்சுளா ஆயத்த ஆடை நிறுவனத்திலும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து லிங்கேஸ்வரா அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று, இரவு மீண்டும் சந்தேகம் அடைந்து மனைவி மஞ்சுளாவிடம் வாக்குவாதத்தில் ஈட்டுப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த லிங்கேஸ்வரா கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
கொலை முயற்சி
அப்போது ,மனைவி மஞ்சுளா கத்தியதால் வீட்டிலிருந்த பெவி குவிக்கை எடுத்து அவரது வாயில் போட்டு ஒட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.இதனை அறிந்த லிங்கேஸ்வரா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து மஞ்சுளாவை மீட்டு அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள லிங்கேஸ்வரா தேடி வருகின்றனர்.