ஷூவில் ஒளிந்திருந்த நாகப்பாம்பு - பிடிப்பவரை பார்த்து படமெடுத்து ஆடிய அதிர்ச்சி வீடியோ வைரல்...!

Viral Video Karnataka Cobra
By Nandhini Oct 10, 2022 06:43 AM GMT
Report

ஷூவில் ஒளிந்திருந்த நாகப்பாம்பு ஒன்று பிடிப்பவரை பார்த்து படமெடுத்து ஆடிய அதிர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஷூவில் ஒளிந்திருந்த நாகப்பாம்பு

கர்நாடக மாநிலம், மைசூரில் ஒருவர் வாசலில் ஷூவை கழற்றி விட்டுள்ளார். காலையில் அவர் வந்து பார்த்தபோது, ஷூவுக்குள் ஏதோ ஒரு சத்தம் வந்துள்ளது. ஷூவை உற்று நோக்கிய அந்த நபர், ஷூவுக்குள் நாகப்பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், பாம்பு பிடிப்பவரும் விரைந்து வந்தனர்.

பாம்பை பிடிக்க முற்பட்டபோது, அது ஷூவுக்குள்ளிருந்து வெளியே எகிறி வந்து படமெடுத்து ஆடியது. இதனையடுத்து, பாம்பு பிடிப்பவர் அதை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்து கொண்டு சென்றார்.

இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

karnataka-mysuru-shoe-cobra-viral-video