இளம் பெண்ணிடம் அத்துமீறிய நபர் .. நிர்வாணப்படுத்தி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் .. நடந்தது என்ன?

கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் பொது இடத்தில்  இளம் பெண்ணிடம்  அத்துமீறி நடந்து கொண்டதாக கூறி பொதுமக்கள் மத்தியில் அந்த நபரை நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள மகாராஜா பூங்காவில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக்கூறி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவரை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மேகராஜ் என்பவர் ஹாசன் நகரில் கட்டட தொழிலாளியாக வேலை செய்கிறார். இவர் மகாராஜா பூங்காவில் ஒரு சிறுமியை துன்புறுத்துவதை உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. அவரை போலீஸாரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, அவர்கள் அவரைத் தாக்கி, ஆடைகளை அவிழ்த்து, பரபரப்பான போக்குவரத்துச் சந்திப்பான ஹேமாவதி சிலை அருகே அவரை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்றுள்ளனர்.   

அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை சமாளித்து உடனடியாக மேகராஜ் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து விசாரித்த போலீஸார், மேகராஜைத் தாக்கி நிர்வாணமாக ஊர்வலம் நடத்தியதாக அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்தனர்.

அந்த இடத்தில் இருந்த ஒரு குழுவினர் குற்றம்சாட்டியதைப்போல அந்த சிறுமி மேகராஜ் மீது எந்த புகாரும் கொடுக்கவில்லை, இருப்பினும், அவர் கொடூரமாக தாக்கப்பட்டு, பொது இடத்தில் நிர்வாணமாக ஊர்வலம் செய்யப்பட்டதால், அவர் எங்களிடம் புகார் அளித்துள்ளார். நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என போலீசார் தெரிவித்துள்ளனர். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்