Wednesday, May 21, 2025

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட இளைஞர்

karnataka sexualharassing
By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கர்நாடகாவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி இளைஞர் ஒருவர் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள மஹாராஜா பூங்காவில் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் மேகராஜ் என்பவர்  ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள ஒரு கும்பல் மேகராஜ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும் அவரை போலீசாரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அந்த கும்பல் அவரைத் கடுமையாக தாக்கி நிர்வாணப்படுத்தி, பரபரப்பான போக்குவரத்துச் சந்திப்பில் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடனடியாக மேகராஜை கைது செய்தனர். மேலும் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச்சென்ற அடையாளம் தெரியாத நான்கு பேர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறும்போது குற்றம் சாட்டப்பட்டவர் மீது, பாதிக்கப்பட்ட பெண் எந்த புகாரும் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கர்நாடக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.