வடிவேல் பட பாணியில் வாழும் மனிதர் - 3 வேளையும் பைக் ஆயில் மட்டுமே உணவு
3 வேளையும் ஆயிலை மட்டுமே குடித்து வினோத மனிதர் உயிர் வாழ்ந்து வருகிறார்.
பைக் ஆயில்
வடிவேலு பட காமெடி காட்சியில் ஒருவர் டியூப் லைட்டை 3 வேலையும் உணவாக சாப்பிடுவதாக கூறுவார். அதே போல் ஒரு மனிதர் நிஜ வாழ்க்கையில் 3 வேலையும் பைக் ஆயிலை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்கிறார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா பகுதி பானுவார நகரை சேர்ந்தவர் குமார் (45), பெற்றோர்கள், சொந்த பந்தங்கள் யாருமில்லை. சிறு வயது முதல் கிடைத்த வேலைகளை செய்து வந்த குமார், ஒருவழியாக மெக்கானிக் தொழிலை கற்றுக் கொண்டு சில கடைகளில் வேலை பார்த்தார்.
மூன்று வேளை
இதில் கிடைக்கும் பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தார். ஆனால் இவர் சாப்பிடுவது சாதாரண உணவு இல்லை. சிறு வயது முதல் சாப்பிட காசில்லாமல் அலைந்த இவர், டூவீலர்களுக்கு போடப்படும் பழைய ஆயிலை குடிக்க ஆரம்பித்துவிட்டார். ஒருகட்டத்தில் இந்த ஆயிலே அவருக்கு உணவாகி விட்டது.
25 வருடங்களாக, 3 வேளையும் பைக்குகளுக்கு பயன்படுத்தும் ஆயிலை மட்டுமே குடித்து வருவதாகவும், இதை தவிர வேறு எந்த உணவும் சாப்பிடுவதில்லை. தண்ணீர் காபி கூட அரிதாகவே அருந்துவார். கடந்த 13 வருடங்களாக சபரிமலைக்கு நடந்தே சென்று வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், நான் ஆயிலை குடிப்பது, சிலருக்கு அதிசயமாக இருப்பதால், அவர்கள் முன்னிலையிலேயே பலமுறை ஆயிலை குடித்துக்காண்பித்துள்ளேன். இதைப்பார்த்த பலரும், என்மேல் அனுதாபப்பட்டு, பணம் தந்து உதவினார்கள்" என கூறினார்.