பைக்கில் காதலியை மடியில் அமர்த்தி எல்லை மீறிய காதலன் - அதிர்ச்சி வீடியோ!
இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.
காதல் ஜோடி விதிமீறல்
கர்நாடகா, விமான நிலைய ரோட்டில் உள்ள எலகங்கா மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் காதலியை மடியில் அமர வைத்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றிருந்தார்.
பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த இளம்பெண், தனது காதலனின் தொடை மீது ஏறி அமர்ந்து கட்டியணைத்தப்படி சென்றார். இதனைப் பார்த்த வாகன ஓட்டி, அதனை வீடியோவாக எடுத்து இளையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதிர்ச்சி வீடியோ
அது வைரலாகி போலீஸாரின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், அந்த இளைஞர் மற்றும் இளம்பெண் ஹெல்மெட் அணியாமலும், விதிமுறைகளை மதிக்காமலும் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது.
Yelahanka police has registered a case against a couple for recklessly driving on airport road. A passerby made the video and alerted the police. Based on which a case has been registered. #Bengaluru #Karnataka pic.twitter.com/WKuIcpCu1k
— Imran Khan (@KeypadGuerilla) May 19, 2024
இதனையடுத்து சிசிடிவி, வாகன எண் மூலம் அந்த ஜோடியைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.