முத்த சேலஞ்ச்... பிளாட்டை வாடகைக்கு எடுத்து விளையாடிய மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடகாவில், கல்லூரி மாணவர்கள் தங்களின் நெருங்கிய தோழிகளை அழைத்து அவர்களுடன் Truth or Dare கேம் விளையாடி, அதன் மூலம் லிப்லாக் சேலஞ்சில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்த சேலஞ்ச் (பந்தயம்)
கல்லூரி மாணவர்களுடன் பள்ளி மாணவ, மாணவிகளும் சேர்ந்து இதில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோவை பள்ளி மாணவர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பதிவுவேற்ற, அந்த வீடியோ பரவியுள்ளது.
பெற்றோர் மற்றும் ஆசியர்கள் கவனத்துக்கு சென்ற இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே நடவடிக்கை எடுத்த பள்ளி நிர்வாகம், சம்மந்தப்பட்ட மாணவர்களை உடனடியாக பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்துள்ளது. காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாட்டு வாடகைக்கு
இதுகுறித்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவத்தில், மாணவர்கள் பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து லிப்லாக் சேலஞ்சை (பந்தையத்தை) நடத்தியதை கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அவர்கள் அந்த பிளாட்டுக்கு வாடகைக்கு சென்றுள்ளனர். பதிவு செய்யப்பட்ட வீடியோவில், மாணவரும், மாணவியும் லிப்லாக்கில் ஈடுபடுகின்றனர். அருகில் இருப்பவர்கள் எல்லாம் அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர்.
வீடியோ லீக்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, 8 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒரு மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்னொரு மாணவர் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
புகார் பதிவு செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு 17 வயதாகிறது. இவர்கள் அனைவரும் 2 மாணவிகளுடன் பல்வேறு நேரங்களில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.