மனைவி இறந்த சோகத்திலும் கண்களை தானம் செய்த கணவன்
கர்நாடகாவில் சுற்றுலா சென்ற இடத்தில் யானைகளுக்கு இடையேயான மோதலில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் ஜூனேஷ், தனது கணவர் மற்றும் 6 வயது மகளுடன் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர், கடைசியாக குடகு மாவட்டத்தில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்றுள்ளார்.

அங்கே இரு யானைகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது, கஞ்சன் யானை தாக்கியதில் நிலைகுலைந்த மார்த்தாண்டா யானை ஜூனேஷ் மீது விழுந்தது.
இதைப்பார்த்தவர்கள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு ஓட, மனைவி ஜூனேஷை காப்பாற்ற அவரது கணவர் போராடினார், ஆனால் அது முடியாமல் போகவே பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது மனைவியை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என ஜூனேஷின் கணவர் ஜோயல் வருத்தத்துடன் தெரிவித்த நிலையில், அவரது கண்களை தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மனைவி இறந்த சோகத்திலும் அவரது கணவரின் இந்த செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.
