மனைவி இருக்கும் போதே வீட்டில் இன்னொரு பெண் - தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கொடுமை!
கர்நாடகாவில் வீட்டுக்கு வேறொரு பெண்ணை அழைத்து வந்து உல்லாசமாக இருந்ததை கண்டித்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஜால்யா கிராமத்தை சேர்ந்த சுவாமி, மனைவி கவிதா, தாய் யசோதம்மா மற்றும் தம்பி சுனிலுடன் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.
இதில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவருக்கும் இடையே தகராறு வாடிக்கையாகி வந்த நிலையில், நேற்று முன் தினம் மனைவி இருக்கும் போதே, சுவாமி வேறொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கவிதா, யார் இந்த பெண்? ஏன் இப்படி செய்கிறீர்கள் என கணவனை கண்டித்துள்ளார். அப்போது சுவாமியின் தாய் யசோதம்மா மற்றும் தம்பி சுனில் ஆகியோர் சுவாமிக்கு ஆதரவு கரம் நீட்டினர்.
இதை மீறியும் கவிதா கேள்வி எழுப்பியதால், ஆத்திரத்தில் குடும்பமே சேர்ந்து கவிதாவை அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவரது கணவர், கவிதாவை வீட்டை விட்டு போக சொல்லி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ரத்த காயமடைந்த கவிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து கணவர், அவரது தாய் மற்றும் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.