கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்த முயன்ற மூவர் கைது..!
கர்நாடகவிலிருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு மதுபாட்டில்களை கடத்த முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மளிகை கடைகள், மதுபானக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுபிரியர்கள் ஓசூர் வழியாக கர்நாடகாவிற்கு சென்று மதுபானங்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குள் வந்த கார் மற்றும் டாடா ஏசி வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் சுமார் 2 லட்சம் மதிப்பிலான 1,728 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.