ஹிஜாப் விவகாரம் : கர்நாடக கல்வி நிலையங்களில் அதிகரிக்கும் பதற்றம்

Protest Student Karnataka Hijab Row
By Thahir Feb 05, 2022 11:45 AM GMT
Report

கல்வி நிலையங்களில் மாணவர்கள் மத உணர்வுகளை துாண்டும் விதமாக ஆடைகளை அணியக்கூடாது என கர்நாடக அரசு உத்தரவிட்ட நிலையில் அதற்கு எதிர்பலைகள் தற்போது கிளம்பியுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் உடுப்பியில் உள்ள கல்லுாரிக்கு வந்த மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து வந்ததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்தநிலையில் உடுப்பி குந்தாப்பூரில் உள்ள பண்டார்கர் கல்லுாரியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காவி நிற துண்டை அணிந்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையறிந்த இஸ்லாமிய மாணவர்கள் மறுபுறம் ஹிஜாப் அணிந்து கொண்டு ஊர்வலம் நடத்த முயன்றனர் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கலைந்து போக செய்தனர்.

இதையடுத்து கல்லுாரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் இரக ஞானந்திரா அனைத்து மதத்தினரும் சேர்ந்து படிக்க கூடிய இடம் பள்ளிக்கூடம் அனைவரும் பாரத மாதவின் குழந்தைகள் என கூறியுள்ளார்.

மேலும் அவர் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஹிஜாப் மற்றும் காவி நிற தாவணிகளை அணியக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சை மேலும் தீவிரமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.