ஹிஜாப் அணிந்து வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்ட மாணவிகள் - மீண்டும் சர்ச்சை

Karnataka Students HijabIssue NotAllowed
By Thahir Feb 14, 2022 09:50 AM GMT
Report

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவர்கள் பள்ளி நுழைவாயிலில் நின்று கொண்டு ஆசிரியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பி.யு கல்லுாரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகளை கல்லுாரி நிர்வாகம் அனுமதிக்க மறுத்தது.

இதையடுத்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்லுாரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துதுவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவி துண்டுகளுடன் கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கின.

இதனால் கல்வி நிலையங்களில் பரபரப்பான சூழல் நிலைவியது.இதையடுத்து கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஹிஜாப் உடைக்கு அனுமதி கோரி மாணவிகள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத அடையாளங்களை குறிக்கும் ஆடைகளுக்கு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் கர்நாடகாவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனிடையே கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் உள்ள பள்ளிகளுக்கு வந்த இஸ்லாமிய மாணவிகளை பள்ளி நுழைவாயிலில் இருந்த ஆசிரியர் தடுத்து நிறுத்தினார்.

மேலும் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களும் புர்கா மற்றும் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஹிஜாப் மற்றும் புர்காவை கழற்றி வைத்துவிட்டு பள்ளிக்குள் சென்றனர்.

பள்ளி நுழைவாயிலில் ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்து வந்த மாணவிகள்,ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.