நான் பயப்படவில்லை..காவிதுண்டு அணிந்திருந்தவர்கள் மாணவர்கள் இல்லை மாணவி முஸ்கான்
கர்நாடகவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு எதிராக ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய மாணவர்களை எதிர்த்து நின்று அல்லாஹு அக்பர் என முழக்கமிட்ட மாணவி சமூக வளைத்தலத்தின் பேசு பொருளாக மாறியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.
பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் காவி நிற துண்டு அணிந்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாண்டியாவில் உள்ள ப்ரி யூனிவர்சிட்டி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை காவிதுண்டு அணிந்து வந்த மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள் விரட்டியடித்த காட்சி சமூக வளைத்தலங்களில் பேசு பொருளாக மாறியது.
பல்வேறு தரப்பினரும் சமூக வளைத்தலங்களில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவி முஸ்கானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மாணவி முஸ்கானை நேரில் சந்தித்து பலரும் தங்களது ஆதரவை பதிவு செய்து வருகின்றனர். மாணவி முஸ்கான் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
தன்னுடைய அசைண்மெண்டை கொடுக்க கல்லுாரிக்கு சென்றாகவும் அப்போது சில காவி துண்டு அணிந்து நின்று கொண்டிருந்த மாணவர்கள் தான் அணிந்து வந்த ஹிஜாப்க்கு எதிராக ஜெய்ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர் என்றார்.
பதிலுக்கு தானும் அல்லாஹ் அக்பர் என முழக்கமிட்டதாக தெரிவித்தார். நான் எதற்கும் அச்சப்படவில்லை என்று கூறிய அவர்,
இத்தனை நாட்களாக வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து சென்றாகவும் கடந்த இரண்டு நாட்களாக தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார்.
கல்லுாரியில் கோஷம் எழுப்பியதில் 10 சதவீதம் பேர் கல்லுாரி மாணவர்கள் என்றும் மற்றவர்கள் வெளியாட்கள் எனவும் கூறினார்.
தங்களை புர்கா அணிந்து வர வேண்டாம் என கல்லுாரி முதல்வர் கூறியதாக தெரவித்த அவர் ஹிஜாபுக்காக தொடர்ந்து போராட்டத்தை முன் எடுப்போம் என்று பேசினார்.
கல்வி தான் எங்கள் முன்னுரிமை அதை அவர்கள் பழாக்க முயலுகிறார்கள் என குற்றம்சாட்டினார். மாணவி முஸ்கான் ப்ரி யூனிவர்சிட்டியில் பி.காம் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிவது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணக்கு வரவுள்ளது