ஹிஜாப் அணிய வேண்டும் என்றால் இஸ்லாமிய நாட்டிற்கு செல்லுங்கள்..மூத்த ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சை பேச்சு

Karnataka Hijab Row Sanjay Dixit Senior IAS Dixit Controversial Speech
By Thahir Feb 05, 2022 07:20 AM GMT
Report

ஹிஜாப் அணிவது முக்கியம் என்றால் இஸ்லாமிய நாட்டிற்கு செல்லுங்கள் என மூத்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் தீட்சித் ட்வீட் செய்துள்ள சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் குந்தாப்பூரில் உள்ள பியு கல்லூரிக்குள் நுழைய விடாமல் மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்கள் முக்காடு அணிந்து கல்லுாரிகளுக்கு சென்று வருவது வழக்கம் .

இந்நிலையில் முக்காடு (ஹஜாப்) அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் காவி நிற துண்டு அணிந்து கொண்டு கல்லுாரிக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து கல்லுாரி முதல்வர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மாணவர்கள் முக்காடு அணிந்து வரக்கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் கல்லுாரிக்கு முக்காடு அணிந்து வந்த மாணவிகளை கல்லுாரி முதல்வர் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாக அம்மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா “மாணவர்கள் கல்லூரிக்கு வருவது வழிபாடு நடத்த அல்ல.மத அடையாளங்களை வழிபாட்டு தலங்களுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

ஹிஜாப், காவித் துண்டு ஆகியவற்றை கல்லூரிக் குள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் தீட்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் சஞ்சய் தீட்சித் ஹிஜாப் அணிவது உங்களுக்கு முக்கியம் என்றால், ஏன் கல்லூரியில் படிக்க வேண்டும்? மதர்சா கல்வி உங்களுக்கு கிடைக்கும். உங்களை ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய நாட்டிற்குச் செல்லுங்கள் என சர்ச்சைகுரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.