பர்தா அணியாத பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர் - காங்கிரஸ் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
இஸ்லாமிய பெண்கள் தங்களின் அழகை மறைக்க ஹிஜாப் அணிவதாக கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள குந்தாப்பூர் அரசு கல்லுாரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு அக்கல்லுாரி முதல்வர் தடை விதித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர்.பதிலுக்கு காவி துண்டு அணிந்து இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டம் கர்நாடகா மாநிலம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் அந்த மாநிலத்தில் மாணவர்களுக்கு இடையேயான மத ரீதியிலான மோதல் போக்கு ஏற்பட இருந்தது.
இதனால் பள்ளி,கல்லுாரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏவும்,அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜமீர் அகமது, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,ஹிஜாப் என்றார் இஸ்லாத்தில் பர்தா என்று பொருள் என்ற அவர் பெண்களின் அழகை மறைப்பதற்காக பர்தா பயன் படுவதாக தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் ஹிஜாப் அணியாத பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்றும் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.