ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுப்பு - கர்நாடகாவில மீண்டும் பரபரப்பு
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த கல்லுாரி மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் தேர்வை புறகணித்து சென்றனர்.
கல்வி நிறுவனங்களில் ‘ஹிஜாப்’ அணிவதற்கான தடை செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு நேற்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது.
உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவி நிபா நாஸ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் சஞ்செய் ஹெக்டே இன்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆனால், ஹோலி பண்டிகைக்கு பிறகு மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள கெம்பாவி கிராம பி.யு கல்லுாரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் 8 பேர் ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். மாணவிகள் இதற்கு முன் ஹிஜாப் அணிந்து வந்ததாகவும்,நேற்று ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதியதாகவும்,ஆனால் இன்று ஹிஜாப் அணிந்த வந்ததாக கூறப்படுகிறது.
இதை கல்லுாரி நிர்வாகம் அனுமதிக்காததால் மாணவிகளுக்கு அனுதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய பல்கலைக் கழக துணை இயக்குநர் ஜே.ஹல்லி உயர்நீதிமன்றம் உத்தரவை நாங்கள் பின் பற்றுகிறோம் எனவே நீங்கள் ஹிஜாப்பை அகற்றிவிட்டு தேர்வு எழுத கேட்டுக்கொண்டோம் ஆனால் அவர்கள் அதை மறுத்துவிட்டனர் என தெரிவித்தார்.