மன்னிப்பு கேட்க மறுப்பு - 'தக் லைஃப்' வெளியீடு ஒத்திவைப்பு

Kamal Haasan Karnataka Thug Life
By Sumathi Jun 03, 2025 07:54 AM GMT
Report

நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? மொழியில் வல்லுனரா? என நீதிமன்றம், கமல்ஹாசனை கேல்வி எழுப்பியுள்ளது.

கமல்ஹாசன் பேச்சு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். கமல்ஹாசன், சிம்பு உடன் அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 5ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

மன்னிப்பு கேட்க மறுப்பு -

தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' எனக் கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதித்துவிட்டதாக கூறி கர்நாடகாவில் போராட்டம் வெடித்துள்ளது. மேலும், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாது எனவும் மிரட்டி வருகின்றனர். படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியது.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன?

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன?

நீதிமன்றம் காட்டம்

இதனால் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மன்னிப்பு கேட்க மறுப்பு -

அதில், கன்னடம் குறித்து பேசிய கமல் என்ன வரலாற்று ஆய்வாளரா? நீங்கள் மொழியியல் வல்லுநரா? என கேட்டதோடு ஒரு பெரும்பான்மையான மக்கள் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. யாராக இருந்தாலும் மக்கள் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும்.

கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா? கமல்ஹாசனின் பேச்சால் சமூக நல்லிணத்திற்கு பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.  

இந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்த போது கமல் ஏன் தனது கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையை குறிப்பிடவில்லையென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கமலை ஈகோ தடுப்பதுவதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படம் வெளியாவது ஒத்திவைக்கப்படுவதாக கமல் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பின் வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளனர்.