சிறுமியிடம் பாலியல் சீண்டல்.. தலைமை ஆசிரியரை வெளுத்து வாங்கிய மாணவிகள்
கர்நாடக மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் பாலியல் சீண்டல் கொடுத்ததால் சக மாணவிகள் அவரை அடித்து வெளுத்து வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் சீண்டல்
கர்நாடக மாநிலம் கட்டேரியில் அரசு பள்ளி மாணவிகள் ஒன்றுகூடி, பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சின்மயா ஆனந்த மூர்த்தி என்பவர் பள்ளி விடுதியில் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.
துடைப்பத்தால் அடி
இந்த தகவலை அறிந்த அந்த பள்ளி மாணவிகள் ஒன்று கூடி, அந்த தலைமை ஆசிரியரை தடி, துடைப்பத்தால் அடித்துள்ளனர்.
அதன் பிறகு பள்ளி தலைமை ஆசிரியர் சின்மயா ஆனந்த மூர்த்தி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அவர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மாணவர்களிடம் பாலியல் சீண்டலில், ஈடுபட்ட தலைமையாசிரியருக்கு பள்ளி மாணவிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.