தாலி கட்டிய சில நிமிடங்களில் உயிரிழந்த மணமகன் - சோகத்தில் முடிந்த திருமணம்
தாலி கட்டிய சில நிமிடங்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாலி கட்டியவுடன் மாரடைப்பு
கர்நாடக மாநிலம் ஜமகண்டி நகரில் கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிரவீன் என்பவருக்கும் பூஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
உறவினர்கள் சூழ்ந்து நிற்க, புரோகிதர்கள்மந்திரம் ஓத மணமேடையில் வைத்து, மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டினார்.
தாலி கட்டிய சில நிமிடங்களில் மணமகனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது.இது குறித்து அவர் தனது உற்வினர்களிடம் தெரிவித்தார்.
கதறியழுத மணமகள்
அடுத்த சில வினாடிகளில் மணமேடையில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக அறிவித்தனர்.
இதனால் திருமண சந்தோஷத்தில் இருந்த இருவீட்டாரும் சோகத்தில் மூழ்கினர்.
திருமணமான சில நிமிடங்களில், மணமேடையிலே கணவனைப் பறிகொடுத்த மணமகள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.