அரசு அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை..சிக்கியது பல லட்சங்கள்..!

Karnataka GovtStaff HouseRaides
By Thahir Mar 17, 2022 08:21 AM GMT
Report

கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக எழுந்த புகார்களை அடுத்து 18 அரசு அதிகாரிகள் வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் 18 அரசு அதிகாரிகள் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அரசு அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை..சிக்கியது பல லட்சங்கள்..! | Karnataka Govt Staff House Raides

மாவட்ட தலைமையகமான பாகல்கோட்டில் உள்ள பாதாமி ரேஞ்ச் வன அதிகாரி சிவானந்த கெடாகியிடம் இருந்து நோட்டு எண்ணும் இயந்திரம் மற்றும் 3.17 கிலோ சந்தனம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று மற்றொரு அதிகாரியான ஷிராஸ்டெதாரிடம் இருந்து 450 கிலோ தங்கம்,5 கிலோ வெள்ளி ஆபரணங்கள்,25 ஏக்கர் நிலம்,12 வீட்டு மனைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சோதரனயின் போது அதிகாரிகளின் கண்ணில் படாமல் இருக்க தங்க ஆபரணங்களை குப்பை தொட்டியில் மறைத்து வைக்கபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஞானேந்திர குமார்,BDA நகரமைப்பு அலுவலர் ராகேஷ் குமார்; யாத்கிரின் ரேஞ்ச் வன அதிகாரி, ரமேஷ் கன்காட்டே; கோகாக் நிர்வாக பொறியாளர் பசவராஜ் சேகர் ரெட்டி பாட்டீல்; மற்றும் விஜயபுரா நிர்மிதி கேந்திரா திட்ட மேலாளர் கோபிநாத் மாளகி.

தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் இயக்குனர் பி.கே.சிவகுமார், ராமநகரா உதவி கமிஷனர் மஞ்சுநாத், சமூக நலத்துறை பொது மேலாளர் ஸ்ரீனிவாஸ்,

தாவாங்கரை சுற்றுச்சூழல் அலுவலர் மகேஸ்வரப்பா, ஹாவேரி ஏபிஎம்சி உதவி பொறியாளர் கிருஷ்ணன், குண்டலுபேட்டை கலால் ஆய்வாளர் சாளுவராஜ்,

தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு உதவி பொறியாளர் கிரிஷ், விஜயநகர காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணா எச்.என். உள்ளிட்ட அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

60 இடங்களில் 400க்கும் அதிகமான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொக்கம் கைப்பற்றப்பட்டதாகவும்,தங்கம் மற்றும் வெள்ளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.