முதல்வர் பதவியை ராஜினாமா செய்தாலும் எடியூரப்பாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்
முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்திருந்தாலும் அவருக்கு அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சராக பதவி வகித்து வந்த எடியூரப்பா கடந்த ஜூலை மாதம் கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய முதலமைச்சராக அவரது நெருங்கிய ஆதரவாளராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு அமைச்சர்களுக்கு நிகரான சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும், இவை அனைத்தும் முதல்வர் பதவியில் பசவராஜ் பொம்மை இருக்கும் வரையில் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.