கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பு

India Lockdown Karnataka
By mohanelango Apr 26, 2021 10:09 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினசரி பாதிப்புகள் 3.5 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் தினசரி மரணங்கள் 3000 நெருங்கியுள்ளன.

இதனைக் கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மும்பையில் பாதிப்புகள் பாதியாக குறைந்துள்ளது. டெல்லியும் கடந்த 10 நாட்களாக முழு ஊரடங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது கர்நாடகாவிலும் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.