கன்னட மக்களின் உணர்வுகளை அவமதிப்பதா? RCB அணியை எச்சரிக்கும் கர்நாடக அரசு

Royal Challengers Bangalore Karnataka Bengaluru Social Media
By Karthikraja Nov 29, 2024 04:00 PM GMT
Report

RCB அணியின் செயலுக்கு கர்நாடக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு பெரிய மவுசு உண்டு. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. 

rcb hindi page

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அதன் சொந்த மாநிலமான கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஹிந்தி கணக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பை வெல்லாவிட்டாலும் அந்த அணியில் உள்ள விராட் கோலிக்காக பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. ரசிகர் பட்டாளத்தை மேலும் அதிகரிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஹிந்தியில் சமூகவலைதளத்தில் கணக்கு துவங்கியுள்ளனர். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

rcb hindi account

கர்நாடகாவில் இந்தி திணிப்பை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் அணி ஹிந்தியில் கணக்கு தொடங்கியதற்கு கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், ஆர்சிபி ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 

இது தொடர்பாக கர்நாடக அரசு சார்பில் கன்னட மொழி மற்றும் கலாச்சார அமைச்சகம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும், இந்த விவகாரத்தை சரி செய்யுமாறும் எச்சரித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.