2 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற குடும்பத்தினர்! அதிர்ச்சி சம்பவம்
கர்நாடகத்தில் 2 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை குடும்பமே கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் கனகபுரா பகுதியில் வசிக்கும் தம்பதியினர் சங்கர்- மானசா, இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது.
மாற்றுத் திறனாளியாய் பிறந்த குழந்தைக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளனர், இந்நிலையில் மருத்துவ செலவுக்கு பயந்து, குழந்தையின் பாட்டியும், கொள்ளுப் பாட்டியும் குழந்தையை கொல்ல முடிவெடுத்தனர். இதன்படி சம்பவதினத்தன்று குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுள்ளனர், கிணற்றில் சிறுமி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது குறித்து ஹ்காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் தாயார், தந்தை, பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.