நீர் தேக்கத்தை கடக்க முயலும் யானைக் கூட்டம் - வைரலாகும் வீடியோ

viral karnataka struggling elephants
By Irumporai Jan 11, 2022 05:32 AM GMT
Report

சமூக வலைதளங்களில் எப்போதும் யானைகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக யானைகள் சற்று சிக்கலில் மாட்டிக் கொண்டு தவித்தால் அந்த வீடியோவை பலரும் பார்த்து பரிதாபம் கொள்வார்கள்.

அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் யானை கூட்டம் ஒன்று சிக்கலில் மாட்டி தவிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் யானைகள் கூட்டம் ஒன்று கர்நாடக காட்டுப்பகுதியில் சுற்றும் போது ஒரு நீர் தேக்கத்தை கடக்க முடியாமல் தவித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த யானைகளை அதற்கு பின்பு கர்நாடக வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக அங்கு இருந்து மீட்டு வனத்திற்குள் விட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பதிவை செய்திருந்த வனத்துறை அதிகாரி மற்றொரு பதிவை செய்துள்ளார். அதில், “இந்த 5 யானைகளும் நீர் தேக்கத்திற்குள் தெரியாமல் விழுந்துள்ளன. ஆகவே நாம் காட்டுப்பகுதிகளில் இருக்கும் கட்டமைப்பை வன விலங்குகளுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.