பாம்பு, குரங்கு, பூஜை என அதகளமாகும் வாக்குச்சாவடிகள் - தொடரும் பரபரப்பு
வாக்குச்சாவடிகளில் பலவிதமான சம்பவங்கள் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குப்பதிவு
கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.

காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், ஷிமோகாவின் தீர்த்தஹள்ளி நகரில் உள்ள குவெம்பு பள்ளி வாக்குச்சாவடிக்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பு
தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க சொல்லி எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பாம்பு பிடி வீரர் மாருதி மாஸ்டர், பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

இதே போல், யாத்கிரியில் உள்ள பிங்க் வாக்குச்சாவடியில் குரங்குகள் அட்டகாசம் செய்துள்ளன. லாமிங்டன் பள்ளி வாக்குச்சாவடி அருகே பூனை ஒன்று வாக்காளர்களை உட்கார வைத்த நாற்காலியில் அமர்ந்துள்ளது.
மேலும், திம்மனகோப்பலு கிராமத்தில் வாக்குச் சாவடிக்குள் நுழைந்த பெண் ஒருவர், EVM மற்றும் VVPATக்கு பூஜை செய்வதற்காக வந்துள்ளார். தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் வாசலிலேயே பூஜை செய்துவிட்டு சென்றுள்ளார்.