கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு - நிலவரம் என்ன?

Karnataka Election
By Vinothini May 10, 2023 12:59 PM GMT
Report

 கர்நாடகாவில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது, இதில் தற்போதைய நிலவரத்தை காணலாம்.

தேர்தல்

கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

karnataka-election-voters-percentage

மாநிலம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஸ் கட்சிகளிடையே பிரதான போட்டி நிலவுகிறது.

நிலவரம்

இந்நிலையில், தேர்தல் வாக்குகள் மே- 13ம் தேதி எண்ணப்படும். இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 6 மணியுடன் வாக்கு பதிவுகள் நிறைவடைகிறது.