கர்நாடாக தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது - வானதி சீனிவாசன்..!
‘கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு, பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது; அது சவால் ஆகவும் அமையாது’ என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்கிறது
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “கர்நாடக மாநிலத்தில் மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்கின்றது. அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் போனது குறித்து கட்சித் தலைமை ஆராயும்.

அந்தத் தேர்தல் முடிவை வைத்து தமிழக முதல்வர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார். மக்கள் பலமுறை திராவிடத்தையும் புறக்கணித்துள்ளனர்.
அண்ணாமலை தனது பங்களிப்பை நன்கு செய்தார்
மக்கள் பாஜகவுக்கு பிரதான எதிர்கட்சி வாய்ப்பைக் கொடுத்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கர்நாடகத்தில் தன் பங்களிப்பை நன்கு செய்தார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சவாலாக இருக்காது. அது பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கும் பாதிப்பாக இருக்காது” என்றார்.