சூடு பிடிக்கும் கர்நாடகா மாநில தேர்தல்; பாஜகவுக்கு ஆதரவாக களம் இறங்கிய காமெடி நடிகர்!

Karnataka Election
By Vinothini May 06, 2023 07:01 AM GMT
Report

கர்நாடகா மாநிலத்திற்கு வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவிற்கு ஆதரவாக பிரபல காமெடி நடிகர் பிரம்மானந்தம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் பிரச்சாரம்

கர்நாடக மாநிலம், சட்டசபை தேர்தலில் தேசிய கட்சிகள், தங்களுக்கு ஆதரவாக திரையுலக பிரமுகர்களை அழைத்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபட செய்கின்றனர்.

karnataka-election-comedy-actor

அந்த வகையில், பாஜக அமைச்சர் சுதாகருக்கு ஆதரவாக, தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் பிரசாரம் செய்தார். மேலும், ஆந்திர மாநில எல்லையை பகிர்ந்து கொள்ளும் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர். அதனால், அந்த தொகுதியை சேர்ந்த பா.ஜ.க வேட்பாளரும், அமைச்சருமான சுதாகருக்கு ஆதரவாக, ஆந்திர மாநில காமெடி நடிகர் பிரச்சாரத்தில் களம் இறங்கினார்.

நடிகர் பேசினார்

இதனை தொடர்ந்து, தொகுதிக்கு உட்பட்ட மண்டிக்கல், கம்மகுட்டஹள்ளி, அடைகல், தொட்டபைலகுர்கி, ஹலேஹள்ளி, புரா, குவடனகெரே, மனசேனஹள்ளி, ஜரபந்தஹள்ளி, மினகனகர்கி ஆகிய கிராம பஞ்சாயத்து மையங்களில் அவர் பிரசாரம் செய்தார்.

karnataka-election-comedy-actor

மேலும், அவர் பிரச்சாரத்தில், ''மஞ்சனஹள்ளியை தாலுகாவாக மாற்றிய பெருமை, சுதாகருக்கு உண்டு. அப்படிப்பட்டவரை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்று கூறியுள்ளார்.